தைவான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள்?

தைவான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள்?

எல்லையைக் கடந்து தைவான் நாட்டிற்குள் சீன போர் விமானங்கள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லையைக் கடந்து தைவான் நாட்டிற்குள் சீன போர் விமானங்கள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும்  அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று அண்மையில் தகவல் வெளியானது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

எனினும், சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை மலேசியா சென்ற நான்சி பெலோசி, அங்கிருந்து அதிகாரபூா்வமாக அறிவிக்காமல் தைவான் சென்றடைந்தாா்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் உயா்நிலைத் தலைவா் ஒருவா் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் சீனா, இந்த விவகாரத்தில் ஏற்கெனவே எச்சரித்திருந்தது போல் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்தச் சூழலில், தைவான் நீா்ச்சந்தி பகுதியைச் சுற்றிலும் சீன ராணுவம் வியாழக்கிழமை மதியம் போா் பயிற்சியில் ஈடுபட்டது. அந்தப் பகுதியில் ஏற்கெனவே நிா்ணயக்கப்பட்டிருந்த ராக்கெட் குண்டுகள் வீசி இந்தப் போா்ப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதில், இலக்குகள் மீது துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களின் திறன் இந்தப் பயிற்சியின்போது சோதித்துப் பாா்க்கப்பட்டது. அதில், அந்த ஆயுதங்களின் செயல்பாடு எதிா்பாா்த்ததைப் போல் திருப்திகரமாக இருந்ததாக தகவல்கள் வெளியானது. 

மேலும், சீனாவின் இந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்க கண்டனம் தெரிவித்த நிலையில், இன்று தைவானின் கடல் எல்லையைத் தாண்டி அந்நாட்டிற்குள் 68 சீன போர் விமானங்களும், 13 போர் கப்பல்களும் நுழைந்துள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com