எங்களது சண்டை காஸா மக்களுடன் அல்ல: இஸ்ரேலிய பிரதமர் 

எங்களது சண்டை காஸா மக்களுடன் அல்ல இஸ்லாமிக் ஜிஹாத் தீவிரவாதிகளுடன் மட்டுமே என இஸ்ரேலிய பிரதமர்  யாயிர்  லபீட் தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

எங்களது சண்டை காஸா மக்களுடன் அல்ல இஸ்லாமிக் ஜிஹாத் தீவிரவாதிகளுடன் மட்டுமே என இஸ்ரேலிய பிரதமர்  யாயிர்  லபீட் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் காஸாவிற்கு இடையே போர் நிகழும் சூழல் நிலவி வருகிறது. காஸாவில் இருந்து 70 ராக்கெட்டுகளை இஸ்ரேல் நாட்டின் மீது ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை இஸ்ரேல் பிரதமர் (பொ) யாயிர் லபீட் கூறியதாவது: 

காஸாவின் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் கமாண்டா் தைசீா்-அல்-ஜபரி என்பவரை சமீபத்தில் சுட்டு வீழ்த்தியது இஸ்ரேல் ராணுவம்.  இவரை தீவிரவாதி என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. அண்மையில், இஸ்லாமிக் ஜிஹாத்தைச் சோ்ந்த மற்றொரு தீவிரவாதி மேற்குக் கரையில் கைது செய்யப்பட்டதாகவும், அதனைத்தொடா்ந்து ஏற்பட்ட அச்சுறுத்தலுக்குப் பதிலடி தரும் விதமாக இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பினரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. 

பொதுமக்களுக்கு எதிராக தொடுக்கப்படும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நாங்கள் எப்போதும் அமைதியாக இருக்க மாட்டோம். காஸாவிலிருந்து இஸ்ரேலை நோக்கி வரும் அச்சுருத்தலை எங்களது ராணுவம் சிறப்பாக எதிர்கொள்ளும். 

தெற்கு இஸ்ரேலியப் பகுதிகளின் மீது காஸா தீவிரவாதிகள் குறிவைத்து தாக்குதல் தொடுக்கின்றனர். நாங்கள் காஸாவுடன் நீண்ட கால பிரச்சினைகளை தொடர விரும்பவில்லை. ஆனால் பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம். 

இஸ்ரேல் மக்களாகிய நாங்கள் பலத்துடன் இருக்கிறோம். தெற்கு இஸ்ரேலிய மக்களுக்கு உறுதுணையாக இருப்போம். எங்களது ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

எதிரிகளை நாங்கள் ஒற்றுமையுடன் எதிர்கொள்கிறோம். சர்வதேச மீடியாவிற்கு நாங்கள் சொல்வது இதுதான். எங்களது சண்டை காஸா மக்களுக்கு எதிராக கிடையாது. இஸ்லாமிக் ஜிஹாத் தீவிரவாதிகளுடன் மட்டுமே. 

இஸ்ரேலை நாசமாக்க ஈரானின் ஆயுதம்தான் இஸ்லாமிக் ஜிஹாத். எங்களது மக்களை காப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com