எலான் மஸ்க் பொருள்கள் ஏலம்: பணத்திற்காக முன்னாள் காதலி எடுத்த முடிவு

உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், அவர் எழுதிய கடிதங்களையும் அவரின் முன்னாள் காதலி ஏலம் விட்டுள்ளார். 
முன்னாள் காதலியுடன் எலான் மஸ்க் (படம்: ஆர்.ஆர். ஏல நிறுவனம்)
முன்னாள் காதலியுடன் எலான் மஸ்க் (படம்: ஆர்.ஆர். ஏல நிறுவனம்)
Updated on
1 min read

உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், அவர் எழுதிய கடிதங்களையும் அவரின் முன்னாள் காதலி ஏலம் விட்டுள்ளார். 

வளர்ப்பு மகனின் படிப்பு செலவிற்கு பணம் இல்லாததால், எலான் மஸ்கின் முன்னாள் காதலி இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் ஏலம் விட்ட புகைப்படமும், கடிதமும் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

டெஸ்லா நிறுவனரும், உலகின் முன்னணி செல்வந்தருமான எலான் மஸ்க் தன்னுடைய கல்லூரி காலத்தில் ஜெனிஃபர் க்வென் என்பவரைக் காதலித்துள்ளார். எலான் மஸ்க்கின் ஜூனியராக பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் பயின்றுள்ளனர்.  

தங்களுடைய 20வது வயதில் பழகும்போது இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். 1995ஆம் ஆண்டு இருவரும் உடன்பட்டு பிரிந்துள்ளனர்.

தற்போது ஜெனிஃபருக்கு 48 வயதாகிறது. தன்னுடைய வளர்ப்பு மகனின் படிப்பு செலவிற்கு பணம் இல்லாததால், எலான் மஸ்க் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், காதலிக்கும்போது அவர் எழுதிய கடிதங்களையும் ஏலம் விட்டுள்ளார். இதன் மூலம் கிடைத்த பணத்தை படிப்பு செலவிற்கு பயன்படுத்துக்கொள்வதாக ஏல நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். 

பென்சில்வேனியா பல்கழைக் கழகத்தின் பயின்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், கடிதமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com