
என்டிடிவின் பங்குகளை வாங்குவது தொடர்பாக அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் என்டிடிவி பங்கின் விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 29.18 சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வைத்துள்ள நிலையில், மேலும் 26% பங்குகளை பங்குதாரர்களிடமிருந்து வாங்க விருப்பம் தெரிவித்து அதற்கான சலுகையை நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்தது.
இதையும் படிக்க: ஒரே நேரத்தில் இரண்டு பட்டம்: ‘மைனர் டிகிரி’ அறிமுகம் செய்தது அண்ணா பல்கலை.
இந்நிலையில், இன்று காலை துவங்கிய பங்குச் சந்தையில் என்டிடிவியின் ஒரு பங்கின் விலை ரூ.379 க்கு ஆரம்பமானது. சிறிது நேரத்திலேயே பங்குகளின் விற்பனை அதிகரித்ததால் தற்போது(காலை 11.45 மணி) நிலவரப்படி 5% உயர்ந்து ரூ.388.20 க்கு விற்பனையாகி வருகிறது.
இதையும் படிக்க: என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 30% பங்குகளை வாங்கும் அதானி குழுமம்!
அதானி நிறுவனம் மேலும் நியூ டெல்லி டெலிவிஷனில்(என்டிடிவி) முதலீடு செய்ய உள்ளதே இந்த விலையேற்றத்திக்கான காரணம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G