இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 7:08 pm

கோவில்பட்டி அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் செல்வ பெருமாள் மகன் அலெக்ஸ். இவா், மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலட்டின்புதூா் பகுதியில் உள்ள கல்லூரி அருகேயுள்ள அணுகு சாலையில் காா் ஓட்டிச் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் ஸ்ரீ பாலாஜி (21) ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், காரும் மோதிக் கொண்டன. இதில் இருவரும் காயமடைந்தனா்.

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீ பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். தனியாா் மருத்துவமனைக்கு அலெக்ஸ் அழைத்துச் செல்லப்பட்டாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.