
இலங்கை அதிபர் மற்றும் நிதியமைச்சரான ரணில் விக்கிரமசிங்க வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி இலங்கையின் இடைக்கால பட்ஜெட்டினை தாக்கல் செய்ய உள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நிதியத்திடம் இருந்து உதவி கோரியுள்ள நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட் குறித்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்
இலங்கையின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 30ல் நிதியமைச்சராக இந்த இடைக்கால பட்ஜெட்டினைத் தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின் அந்த வாரம் முழுவதும் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறும்.
இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் குறித்து ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது: “ இந்த இடைக்கால பட்ஜெட்டின் மூலம் இலங்கை மக்களின் தேவைகளை ஓரளவு சரி செய்ய முடியும். அவர்கள் தினமும் மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டினை சந்தித்து வருகின்றனர். மருந்துப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த இடைக்கால பட்ஜெட் இந்த பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வாக அமையும்.” என்றார்.