ட்விட்டரில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள 150 கோடி கணக்குகள் விரைவில் நீக்கப்படும் என்று அதன் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ட்விட்டரில் பல ஆண்டுகளாக 'ட்வீட்' அல்லது லாக் இன் செய்யாத கணக்குகளை நீக்க திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ட்விட்டரில் பிரபலங்கள் பெயரில் உள்ள போலி கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ட்விட்டர் நிறுவனத் தலைவராக எலான் மஸ்க் பதவியேற்ற பிறகு, 50% ஊழியர்களான சுமார் 7,500 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் பலர் தானாகவே வெளியேறினர்.
இதையும் படிக்க | மீண்டாரா, 'பழைய’ வடிவேலு? நாய் சேகர் ரிட்டன்ஸ் - திரை விமர்சனம்