டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ. 96.28 ஆக நிறைவு!தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்குஷ்பு மகள் திருமணம்! த்ரிஷாவுக்கு புகைப்படக் கலைஞராக மாறிய பிரபல நடிகை!மக்கள்தொகைக் கணக்கெடுப்பு! இணையத்தில் நாமே பதிவிடலாம்! 33 கேள்விகள் என்னென்ன?சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனையை வட கொரியா மீண்டும் வெள்ளிக்கிழமை நடத்தியது.

News image
Updated On :24 டிசம்பர் 2022, 2:08 am IST

தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனையை வட கொரியா மீண்டும் வெள்ளிக்கிழமை நடத்தியது.

இது குறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணையொன்றை வட கொரியா வெள்ளிக்கிழமை மீண்டும் ஏவி பரிசோதித்தது. அந்த நாட்டின் கிழக்கு கடல் பகுதியை நோக்கி ஏவுகணை வீசப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் இணைந்து அண்டை நாடான தென் கொரியா போா்ப் பயிற்சி மேற்கொள்வது, தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுகிறது. இந்த நிலையில், தென் கொரிய போா் விமானங்களுடன் இணைந்து அமெரிக்காவின் அணு ஆயுதத் திறன் கொண்ட குண்டு வீச்சு விமானங்கள் 3 நாள்களுக்கு முன்னா் பயிற்சி மேற்கொண்டன.

இதற்கு பதிலடியாகவே வட கொரியா தற்போது ஏவுகணை பரிசோதனை மேற்கொண்டதாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.