சீனாவிலிருந்து வரும் அதிர்ச்சியூட்டும் கரோனா நிலவரம் 

சீனாவில் நாள் ஒன்றுக்கு கரோனா பாதித்து மரணமடைவோர் எண்ணிக்கை 9 ஆயிரமாக அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவிலிருந்து வரும் அதிர்ச்சியூட்டும் கரோனா நிலவரம் 
சீனாவிலிருந்து வரும் அதிர்ச்சியூட்டும் கரோனா நிலவரம் 

சீனாவில் நாள் ஒன்றுக்கு கரோனா பாதித்து மரணமடைவோர் எண்ணிக்கை 9 ஆயிரமாக அதிகரித்திருப்பதாக ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியாகும் ஊடகச் செய்தி ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஊடகச் செய்தியில், பிரிட்டிஷிலிருந்து இயங்கும் ஆய்வு நிறுவனம் ஏர்ஃபினிடி சீனாவில், கரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. பாதிப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளை சீனா கடந்த நவம்பர் மாதத்தில் தளர்த்திய நிலையில் அங்கு கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.

சீனாவில் டிசம்பர் மாதத்தில் மட்டும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தொட்டிருப்பதாகவும், கிட்டத்தட்ட 1.8 கோடியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மத்தியில் நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்போர் விகிதம் 30 லட்சமாக இருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில், ஜனவரி மாதம் மட்டும் கரோனாவுக்கு 5,84,000 பேர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பெய்ஜிங், கரோனா பாதிப்பு மற்றும் மரண விகிதங்களை மறைப்பதை தீவிரப்படுத்தியிருப்பதாகவும், இதுவரை உலகம் காணாத வகையில், சீனாவில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், இதனை கையாள முடியாமல் ஒட்டுமொத்த நாடும் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com