
'உக்ரைனுடன் போர் வேண்டாம்' என ஆயிரக்கணக்கான ரஷிய மக்கள் சாலைகளில், தெருக்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது நேற்று போர் தொடுக்கத் தொடங்கியது. ரஷியா தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பு மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதையும் படிக்க | 'உக்ரைன் தனித்துப் போரிடுகிறது; உதவி கேட்டும் உலக நாடுகள் முன்வரவில்லை' - அதிபர் ஸெலென்ஸ்கி வேதனை
இந்நிலையில், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, போருக்கு எதிராக ரஷியாவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷியாவில் தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
'போர் வேண்டாம்', 'உக்ரேனியர்களுடன் ஒற்றுமை பாராட்டுவோம்', 'உலக அமைதி வேண்டும்' என்று பதாகை மற்றும் கோஷங்களுடன் போரிட்டு வருகின்றனர். போருக்கு எதிரான ரஷிய மக்களின் போராட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதையும் படிக்க | உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களின் பயணச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...