உதவி கேட்ட உக்ரைன் அமைச்சர்...இணையம் வழங்கிய எலான் மஸ்க் 

உக்ரைனின் டிஜிட்டல் மாற்றத்திற்கான அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், செயற்கைக்கோள் மூலம் இணைய வசதி வழங்கியுள்ளார் எலான் மஸ்க்.
எலான் மஸ்க் 
எலான் மஸ்க் 

போர் மேகம் சூழ்ந்துள்ள உக்ரைனில், ரஷியாவுக்கும் அந்நாட்டு படைகளுக்கும் இடையே கடும் போர் நிகழ்ந்துவருகிறது. ரஷிய அதிபர் புதின் உத்தரவை தொடர்ந்து அந்நாட்டின் படைகள், உக்ரைன் மீது வியாழக்கிழமை போரை தொங்கியது.

இதன் காரணமாக, இணைய சேவை அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உக்ரைன் சார்பில் உதவி கேட்கப்பட்டதையடுத்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அங்கு தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "உக்ரைனில் ஸ்டார்லிங்க் சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு முனையங்களில் சேவை தொடங்கப்பட்டுவருகிறது" என பதிவிட்டுள்ளார். 

உக்ரைன் நாட்டின் டிஜிட்டல் மாற்றத்திற்கான அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், செயற்கைக்கோள் மூலம் இணைய வசதி வழங்கியுள்ளார் எலான் மஸ்க். 

முன்னதாக, உக்ரைன் அமைச்சர் மைக்கைலோ ஃபெடோரோவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் செவ்வாய் கிரகத்திற்கு குடியேற முயற்சிக்கும் போது, ரஷியா உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. உங்கள் ராக்கெட்டுகள் விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக தரையிறங்கும்போது, ரஷிய ராக்கெட்டுகள் உக்ரேனிய குடிமக்களை தாக்குகின்றன. உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் நிலையங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என பதிவிட்டிருந்தார்.

புத்திசாலித்தனமான ரஷிய மக்களிடம் பேசி அவர்களது அரசின் படையெடுப்புக்கு எதிராக நிற்க உதவ வேண்டும் என்றும் எலானிடம் அவர் வலியுறுத்தியிருந்தார். உக்ரைனில் ரஷியா படையெடுத்ததிலிருந்து இணைய சேவையில் குறிப்பிட தகுந்த அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இணைய கண்காணிப்பு நிறுவனமான நெட் பிளாக்ஸ் தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் இணைய சேவை வழங்கும் வகையில் 2000க்கும் மேற்பட்ட செயற்கைக்கோளகளை ஸ்டார்லிங்க் நிறுவனம் இயக்கிவருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com