ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாகன விபத்தில் சிக்கிய அர்னால்டு...வெளியான அதிர்ச்சி செய்தி

இச்சம்பவம், வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்றதாகவும் விபத்தில் சிக்கிய பெண் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அர்னால்டின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

News image
அர்னால்டு
Updated On :23 ஜனவரி 2022, 8:46 am

DIN

நடிகரும் கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் அருகே காரில் சென்றுக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார்.

ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். ஆனால், நல்வாய்ப்பாக எந்த வித காயமும் இன்றி அவர் உயிர் தப்பினார். 

இச்சம்பவம், வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்றதாகவும் விபத்தில் சிக்கிய பெண் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அர்னால்டின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், "அர்னால்ட் ஓட்டிக் கொண்டு சென்ற கார், ​​சன்செட் பவுல்வர்ட் மற்றும் அலென்ஃபோர்ட் அவென்யூ சந்திப்பில் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக இன்னும் இரண்டு கார்கள் மோதிக் கொண்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், "தலையில் காயத்துடன் இருந்த பெண்ணை மருத்துவ உதவியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தில் சிக்கியவர்கள் போதைப்பொருள் அல்லது மது அருந்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால், விசாரணை நடைபெற்றுவருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்னால்டுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறியுள்ள அவரின் செய்தித் தொடர்பாளர், விபத்தில் சிக்கிய பெண்ணை நினைத்துதான் அவர் கவலைப்பட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்திலேயே சிறிது நேரம் இருந்து, அவரின் உடல்நிலை குறித்து ஆராய்ந்த பின்னரே அர்னால்டு அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையிடம் அவர் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.