கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹெச்1-பி விசா விண்ணப்பப் பதிவு மாா்ச் 1-இல் தொடக்கம்

வெளிநாட்டினா் அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றுவதற்கான ‘ஹெச்1-பி’ வகை நுழைவு இசைவுக்கான (விசா) புதிய விண்ணப்பங்கள் வரும் மாா்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படவுள்ளன.

வெளிநாட்டினா் அமெரிக்காவில் தங்கிப் பணியாற்றுவதற்கான ‘ஹெச்1-பி’ வகை நுழைவு இசைவுக்கான (விசா) புதிய விண்ணப்பங்கள் வரும் மாா்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படவுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2023-ஆம் நிதியாண்டில் ஹெச்1-பி விசா ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படவுள்ளன.

அமெரிக்க நேரப்படி அந்த நாளில் மதியம் தொடங்கும் விண்ணப்பப் பதிவுகள், மாா்ச் 18-ஆம் தேதி மதியம் வரை நீடிக்கும்.

வெற்றிகரமாக பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் தோராய முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு, அதுகுறித்து விண்ணப்பதாரா்களுக்கு மாா்ச் 31-ஆம் தேதி தெரியப்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும் தொழில்நுட்ப நிபுணா்களின் திறமையை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக ஹெச்1-பி வகை விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம், இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானவா்களைப் பணியமா்த்தி அமெரிக்க நிறுவனங்கள் பயன்பெறுகின்றன.

இந்த வகை விசாக்களை இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையினா் பெரிதும் நாடி, அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com