ஷின்சோ அபே படுகொலை: குற்றவாளி வீட்டில் வெடிபொருள்கள்

ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றவரை ஜப்பான் காவல்துறை கைது செய்த நிலையில், அவரது வீட்டில் நடந்த சோதனையில் வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஷின்சோ அபே படுகொலை: குற்றவாளி வீட்டில் வெடிபொருள்கள்
ஷின்சோ அபே படுகொலை: குற்றவாளி வீட்டில் வெடிபொருள்கள்

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்றவரை ஜப்பான் காவல்துறை கைது செய்த நிலையில், அவரது வீட்டில் நடந்த சோதனையில் வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவரது கழுத்து மற்றும் தோள்பட்டை எலும்புப் பகுதிகளில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன.

அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதே, மாரடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அபேவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நாரா என்ற நகரில் வசித்து வந்த டெட்சுயா யாமாகாமி என்ற 41 வயது நபரை ஜப்பான் காவல்துறை கைது செய்தனர். அவரது வீட்டை சோதனை செய்ததில், வெடிபொருள்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கு ஜப்பான் நகரமான நாராவில், அந்நாட்டு நேரப்படி, காலை 11.30 மணியளவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) சுடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

துரிதமாக செயல்பட்ட காவல்துறை, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட நபரின் அடையாளத்தைக் கண்டறிந்து கைது செய்ததோடு, சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். அது நாட்டுத் துப்பாக்கி என்றும் கூறப்படுகிறது.

நாரா நிஷி காவல்நிலையத்தில், குற்றவாளியிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட அந்த நபர், காவல்துறையிடமிருந்து தப்பியோட முயலவில்லை என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com