ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவைச் சுட்டவர் கைது

ஷிண்சோ அபேவை சுட்டவர் என்று அடையாளம் காணப்பட்ட நபரை ஜப்பான் காவல்துறை கைது செய்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷிண்சோ அபேவை சுட்டவர் கைது
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷிண்சோ அபேவை சுட்டவர் கைது

டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷிண்சோ அபேவை சுட்டவர் என்று அடையாளம் காணப்பட்ட நபரை ஜப்பான் காவல்துறை கைது செய்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாரா என்ற நகரில் வசித்து வந்த டெட்சுயா யாமாகாமி என்ற 41 வயது நபரை ஜப்பான் காவல்துறை கைது செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கு ஜப்பான் நகரமான நாராவில், அந்நாட்டு நேரப்படி, காலை 11.30 மணியளவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷிண்சோ அபே (67) சுடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அவரது நெஞ்சுப் பகுதியில் சுடப்பட்டதால், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

துரிதமாக செயல்பட்ட காவல்துறை, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட நபரின் அடையாளத்தைக் கண்டறிந்து கைது செய்ததோடு, சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

நாரா நிஷி காவல்நிலையத்தில், குற்றவாளியிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட அந்த நபர், காவல்துறையிடமிருந்து தப்பியோட முயலவில்லை என்றும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com