சீனாவில் கனமழை: 5 லட்சம் பேர் பாதிப்பு

சீனாவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இதுவரை சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண வெள்ளக் கட்டுப்பாட்டு தலைமையகம் தெரிவித்துள்ளது. 
சீனாவில் கனமழை: 5 லட்சம் பேர் பாதிப்பு

சீனாவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இதுவரை சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாகாண வெள்ளக் கட்டுப்பாட்டு தலைமையகம் தெரிவித்துள்ளது. 

சீனாவில் கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து பெய்த கனமழை மாநிலத்தின் ஜியாங்சி மாகாணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மழை முடிவுக்கு வந்தாலும், அடுத்த வாரம் மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் மேலும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உள்ளூர் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

எனவே, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லவும், மின்சார விநியோகத்தை துண்டிக்கவும்,  விவசாய நிலங்கள் மற்றும் மீன்குட்டைகனின் வடிகால் அமைப்புகளை சரிபார்க்கவும் பரிந்துரைத்தது. 

கடும் மழையால் பாதிக்கப்பட்ட சாலைப் பகுதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தவும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் போக்குவரத்தை வழிநடத்தவும், தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு அரசுக்கு மையம் அறிவுறுத்தியுள்ளது 

அவசரக்கால மேலாண்மை அமைச்சகம் (MEM) தொலைதூர நீர் விநியோக டிரக்குகள் மற்றும் ரப்பர் படகுகளுடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் மீட்பு நிபுணத்துவம் கொண்ட தீயணைப்பு வீரர்களின் குழுவை அனுப்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com