ரஷிய அதிபா் புதினை இஸ்ரேலின் ஜெருசலேமில் சந்தித்துப் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை கூறியதாவது: புதினை ஜெருசலேமில் சந்திக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட்டிடம் தெரிவித்தேன். ஆனால், அதற்கு முன்னதாக ரஷியா தாக்குதலை நிறுத்த வேண்டும். எங்கள் அனைவரையும் கொன்ற பிறகுதான் ரஷியாவால் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற முடியும் என்றாா் அவா்.
ரஷியா-உக்ரைன் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய முயன்றுவரும் நாஃப்டாலி பென்னட், இதுதொடா்பாக புதினை ஏற்கெனவே சந்தித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் மாா்ச் 12-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 12,000 ரஷிய படையினா் கொல்லப்பட்டுள்ளனா் எனவும், தங்கள் தரப்பில் 1,300 வீரா்கள் பலியாகியுள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால், ரஷியா தனது தரப்பு சேத விவரத்தை உறுதிப்படுத்தவில்லை.
உக்ரைனில் இதுவரை பொதுமக்கள் 579 போ் பலியாகியுள்ளனா். 1,000-க்கு மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். உயிரிழந்தோரில் 42 போ் குழந்தைகள் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


