ரஷியாவின் முன்மொழிவை நிராகரித்த உக்ரைன்

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இருதரப்பினரிடையே அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ரஷியாவின் முன்மொழிவை நிராகரித்த உக்ரைன்
ரஷியாவின் முன்மொழிவை நிராகரித்த உக்ரைன்

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இருதரப்பினரிடையே அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

பெலாரஸில் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எட்டப்படாத நிலையில் காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் அரசு ராணுவ ரீதியிலான மற்ற நாடுகளுடன் இணைய தடை விதிக்கும் ரஷியாவின் முன்மொழிவை உக்ரைன் நிராகரித்துள்ளது. ஸ்வீடன், ஆஸ்திரியா போன்ற நாடுகளைப் போன்று ராணுவரீதியிலான இணைவில் பிற நாடுகளுடன் உக்ரைனும் நடுநிலை வகிக்க வேண்டும் என ரஷியா முன்மொழிந்திருந்தது. 

ரஷியாவின் முன்மொழிவை நிராகரித்தாலும் அந்நாட்டின் பல வாதங்களை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு உக்ரைன் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com