சூடானில் தீவிரமாகும் பொருளாதார நெருக்கடி: எச்சரிக்கும் ஐநா

சூடானில் நிலவிவரும் கடும்பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நடப்பாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சூடானில் நிலவிவரும் கடும்பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நடப்பாண்டு செப்டம்பர் மாதத்திற்குள் பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஐநா கவலை தெரிவித்துள்ளது.

சூடானில் நிலவிவரும் வறுமை நிலை குறித்த அறிக்கையை உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டன. அதில் இன்னும் சில மாதங்களில் அந்நாட்டில் வறுமையால் வாடுபவர்களின் எண்ணிக்கை 1.8 கோடியாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாத நாட்டின் உணவு தானிய உற்பத்தியானது கடந்த ஆண்டைக் காட்டிலும்  மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உணவுப் பொருள்களின் விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் உணவு தானிய உற்பத்தியில் ஏற்படும் பற்றாக்குறை மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகள் அவை கவலை தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் 30 சூடான் பவுண்டுகளாக இருந்த ஒரு ரொட்டியின் விலை தற்போது 50 சூடான் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில் 50 கிலோ சர்க்கரை மூட்டை 18,000 லிருந்து 30,000 சூடான் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது. நவம்பரில் 320 சூடான் பவுண்டுகளாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் இந்த வாரம் 672 சூடான் பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே பொருளாதார சிக்கலில் தவித்துவரும் சூடான், உக்ரைன் ரஷிய போர் காரணமாக நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. நாட்டின் கோதுமை தேவையில் 50 சதவிகிதத்தை ரஷியாவை சூடான் நம்பியுள்ளதால் நாளுக்குநாள் நெருக்கடிகள் தீவிரமாகி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com