
பெய்ஜிங்: சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதற்கு மக்களின் போராட்டம் ஒரு பக்கம் அதிகரித்தாலும், ஊரடங்கு காரணமாக கரோனா பரவல் குறைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா தொற்று மற்றும் அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும், அதனை எதிர்த்து நடந்து வரும் போராட்டங்களாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜிங்ஜியாங்கின் பல்வேறு பகுதிகளிலும், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நேரில் செய்து பார்வையிட்டு வருகிறார்.
தொற்று நோய் பரவும் வேகம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், மருத்துவமனைகளில் நிலைமை சற்று சீரடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில், சீனாவின் பல்வேறு மாகாணங்களில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்த நிலையில், ஜிங்ஜியாங் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்துப் போராடியவர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சீனாவில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடும் விமா்சனங்களுக்கு மத்தியிலும், கரோனா தொற்று பரவலே இருக்கக் கூடாது என்ற கொள்கையை சீன அரசு தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது. பொருளாதார இழப்புகளைச் சந்தித்தாலும் கட்டாய கரோனா பரிசோதனை, கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள் உள்ளிட்டவற்றை அந்நாட்டு அரசு கடைப்பிடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.