தறிகெட்டு ஓடிய டெஸ்லா ரக கார்: வாகனங்களை பந்தாடிய விடியோவால் அதிர்ச்சி

சாலையோரம் காரை நிறுத்த முயன்றபோது, வேகமெடுத்த டெஸ்லா கார், சாலையில் தறிகெட்டு ஓடி வாகனங்களை பந்தாடிய விடியோவைப் பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சீனாவின் குவாங்டாங்க மாகாணத்தில் நவம்பர் 5ஆம் தேதி டெஸ்லா கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தறிகெட்டு ஓடி, எதிரே வந்த வாகனங்கள் மீது மோதியதில் ஒரு சிறுமி உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.

டெஸ்லா ரக ஒய் வகை மாடல் கார், வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த முயன்றபோது வேகமெடுத்தது ஏன்? என்பது குறித்தும், காரில் தொழில்நுட்பக் கோளாறு இந்த விபத்துக்குக் காரணமா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அமெரிக்கா கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா அறிவித்துள்ளது.

டெஸ்லாவின் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக சீனா விளங்குகிறது. இந்த நிலையில்தான், இந்த விபத்துக் காட்சிகள் அந்நாட்டின் மிக முக்கிய சமூக வலைத்தளமான வெய்போவில் அதிகம் பேரால் பகிரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com