ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயலாளராக லக்ஷ்மண் நரசிம்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகளவில் பிரபலமான காபி அருந்தக நிறுவனமான ஸ்டார்பக்ஸ் கார்பரேஷனில் முதல் முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மண் நரசிம்மன்(55) தலைமைச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லக்ஷ்மண் டுயூரக்ஸ் ஆணுறை தயாரிப்பு நிறுவனம் உள்பட பல நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிவர்.

ஸ்டார்பக்ஸ் காபி
தற்போது, ஸ்டார்பக்ஸ் சிறிய அளவிலான சரிவைச் சந்தித்து வருவதால் இழந்த சந்தை மதிப்பை மீண்டும் சரிப்படுத்த லக்ஷ்மண் நரசிம்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க்கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு
மேலும், இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஸ்டார்பக்ஸில் இணையும் லக்ஷ்மண் 2023, ஏப்ரலில் புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொள்வார் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக நாதெள்ள சத்யா, அடோப் சிஇஓவாக சாந்தனு நாராயண், கூகுள் சிஇஓவாக சுந்தர் பிச்சை, ட்விட்டர் தலைவர் பராக் அகர்வால் ஆகியோர் அமெரிக்க நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள இந்தியர்கள். தற்போது, அப்பட்டியலில் லக்ஷ்மண் நரசிம்மனும் இணைந்துள்ளார்.
இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் 50% பங்குகள் டாடா குழுமத்திடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 26 - நேரலை

தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி!
இ. மெயில்களை எழுதுவதில் செயற்கை நுண்ணறிவு

குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



