முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதலாவது விமானந்தாங்கி போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அா்ப்பணித்தார்.
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலானது ரூ.23,000 கோடி செலவில் கொச்சி கப்பல்கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இதன் மூலமாக விமானம் தாங்கிக் கப்பலை சொந்தமாகக் கட்டும் திறன் கொண்ட வெகுசில நாடுகளுடன் இந்தியாவும் இணைந்தது.
போா்க் கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டு, கொச்சி கப்பல் கட்டும் தளத்தால் கட்டப்பட்ட இந்தக் கப்பல், அதிநவீன தானியங்கி வசதிகளைக் கொண்டுள்ளது. இந்திய கடற்படை வரலாற்றிலேயே உள்நாட்டில் கட்டப்பட்ட மிகப்பெரிய கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகும்.

ஐஎன்எஸ் விக்ராந்த்
இந்தக் கப்பலில் நூறுக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், இயந்திரங்களும் ஏராளமாக பொருத்தப்பட்டுள்ளன.
1,700 வீரர்கள் பயணிக்கும்படியாக உருவாகியுள்ள இக்கப்பலிலிருந்து மிக் - 29கே போா் விமானங்கள், கமோவ் - 31 ஹெலிகாப்டா்கள், எம்ஹெச் - 60ஆா் ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இயக்கவும் தரையிறக்கவும் முடியும். அதிகபட்சமாக சுமாா் 28 நாட் வேகத்தில் கப்பலை இயக்க முடியும்.

இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடி இன்று கொச்சி கடற்படைத் தளத்தில் இக்கப்பலை இந்தியக் கடற்படையில் இணைத்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன், கடற்படையின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
36 நாள்களுக்குப் பிறகு... அமைதி திரும்பிய ஜந்தர் மந்தர்!

2 கோல்கள் அடித்த நெய்மர்..! கொண்டாட்டத்தின் மூலமாக விமர்சனங்களுக்கு பதிலடி!

இந்த வாரம் கலாரசிகன் - 26-07-2026

திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையாா் கோயிலில் சிக்கிய பெண் பக்தர்!
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



