
தெற்கு துருக்கியில் இரண்டாவது நாளாகக் காட்டுத் தீ பரவி வருவதால், அங்குள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
மத்திய தரைக்கடல் கடலோர மாகாணமான மெர்சினில் உள்ள குல்னார் மாவட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தானது அருகிலுள்ள சிலிப்கே மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் தீ பரவியது.
துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரக்கால மேலாண்மை நிறுவனத்தின் படி,
சம்பவ இடத்தில் 29 நீர் இறக்கும் ஹெலிகாப்டர்கள், 11 விமானங்கள் மற்றும் சுமார் 850 பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
படிக்க: நீட் தோ்வில் 4 பேர் ஒரே மதிப்பெண் எடுக்க ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்தது எப்படி?
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான வீடுகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்தில் சிக்கி 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெர்சினின் அருகிலுள்ள மாகாணமான அன்டல்யாவுடன் இணைக்கும் நெடுஞ்சாலையும் முன்னெச்சரிக்கை காரணமாக மூடப்பட்ட நிலையில், வியாழனன்று மீண்டும் திறக்கப்பட்டது.
கடந்த கோடையில், துருக்கியின் மத்திய தரைக்கடல் மற்றும் ஏஜியன் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடுமையான வெப்பம் வீசிய நிலையில் ஏற்பட்ட தீ விபத்தால் குறைந்தது 8 பேரும், எண்ணற்ற விலங்குகளும் பலியானது குறிப்பிடத்தக்கது.