பிரிட்டன் அரசி உடலுக்கு இறுதி மரியாதை: அமெரிக்க அதிபர் இங்கிலாந்து பயணம் 

பிரிட்டனின் மறைந்த அரசி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார். 
பிரிட்டன் அரசி உடலுக்கு இறுதி மரியாதை: அமெரிக்க அதிபர் இங்கிலாந்து பயணம் 

பிரிட்டனின் மறைந்த அரசி எலிசபெத்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.

கடந்த 8-ஆம் தேதி மறைந்த அரசி எலிசபெத்தின் உடல், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் பகுதியிலுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அமெரிக்க அதிபர் பயணம் செய்யவிருக்கிறார். முன்னாள் அதிபர் டிரம்ப் கலந்துக் கொள்ளவிருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் பிரிட்டன் சார்பாக தற்போதைய அதிபர் பைடன் மற்றும் அவரது மனைவி மட்டுமே பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

செப்.19 (திங்கள் கிழமை) 7,50,000 மக்கள் இறுதி மரியாதையில் கலந்துக் கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இறுதிச் சடங்கில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் எண்ணிக்கை விவரங்கள் பலரும் ரகசியமாக வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதிச் சடங்கு செப்.19 -ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அரச குடும்பத்தினா், அரசியல் தலைவா்கள் மற்றும் உலகத் தலைவா்கள் கலந்துகொண்டு ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com