சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வீட்டு அழைப்பு மணியை அழுத்தி விளையாடிய சிறுவர்களைக் கொன்ற இந்திய வம்சாவளி

வீட்டு அழைப்பு மணியை அழுத்தி பிராங்க் (prank) செய்த 3 பதின் வயதினரை அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2023, 6:01 am

DIN

வீட்டு அழைப்பு மணியை அழுத்தி பிராங்க் (prank) செய்த 3 பதின் வயதினரை அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் வசித்து வருபவர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அனுராக் சந்திரா. அனுராக் சந்திரா  மூன்று சிறுவர்களை கொன்றதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி நடந்துள்ளது. சிறுவர்கள் குழுவாக வந்து அனுராக் சந்திராவின் வீட்டினுடைய அழைப்பு மணியை அழுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த சிறுவர்களில் ஒருவன் அனுராக் சந்திராவின் பின்புறம் தட்டிவிட்டு ஓடியதாகக் கூறப்படுகிறது. அதன் பின் ஏற்பட்ட விபத்தில் இந்த பிராங்க் செயலில் ஈடுபட்ட 16 வயது நிரம்பிய மூன்று சிறுவர்களும் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. இந்த சிறுவர்களின் இறப்புக்கு அனுராக் சந்திரா தான் காரணம் எனக் கூறப்படுகிறது. 

இருப்பினும், விபத்து நடந்த அன்று தான் அதிகமாக குடித்திருந்ததாகவும், தனது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து மிகுந்த கவலையில் இருந்ததாகவும் அனுராக் சந்திரா தெரிவித்துள்ளார். அந்த சிறுவர்களை கொலை செய்யும் நோக்கத்தில் காரினை பின் தொடரவில்லை எனவும், அவர்கள் கார் மரத்தின் மீது மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

காரில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை என நினைத்து அந்த இடத்தில் காரை நிறுத்தாமல் சென்றதாகவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு மனைவியை துன்புறுத்தியதாக அனுராக் சந்திரா மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.