இம்ரான் கான் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை!

சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கான்
இம்ரான் கான்

சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான், 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி வகித்தபோது, அந்நாட்டு அரசுக் கருவூலத்தில் இருந்த வெளிநாட்டுத் தலைவா்களின் பரிசுப் பொருள்களை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்று ஊழலில் ஈடுபட்டாா் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக தோ்தல் ஆணையம் தொடுத்த வழக்கில், இம்ரான் கானை குற்றவாளி என்று இஸ்லாமாபாத் மாவட்ட அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. அத்துடன் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதையடுத்து உடனடியாகக் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், அட்டக் நகர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால், 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் இன்னும் சில நாள்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இம்ரான் கானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com