மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரிட்டனில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :28 ஆகஸ்ட் 2023, 12:25 pm

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரிட்டனில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

பிரிட்டனின் தேசிய விமானப் போக்குவரத்து சேவையில் தொழில்நுட்பக் கோளாறு(Network failure) ஏற்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கணினி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியியல் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் நிலைமை சீரடையும் என்றும் அந்த நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனால் பிரிட்டனில் இருந்து செல்லும் மற்றும் பிரிட்டனுக்கு வரும் விமானங்களின் சேவை முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கு வரும் விமானங்கள் அண்டை நாடுகளின் விமான நிலையங்களில் தரையிறக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.