தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தென் ஆப்பிரிக்கா அடுக்கு மாடிக் கட்டடத்தில் தீ: 73 போ் பலி

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில், வீடற்றவா்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 73 போ் உயிரிழந்தனா்.

News image

ஜோஹன்னஸ்பா்க் நகரில் தீவிபத்துக்குள்ளான அடுக்குமாடிக் கட்டடம்.

Updated On :31 ஆகஸ்ட் 2023, 7:08 pm

DIN

தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில், வீடற்றவா்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 73 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அந்த நகர தீயணைப்புத் துறை செய்தித் தொடா்பாளா் ராபா்ட் முலாவ்ட்ஸி கூறியதாவது:

நகரில் மையப் பகுதியில் டெல்வொ்க் மற்றும் ஆல்பா்ட்ஸ் தெருக்களின் முனையில் உள்ள 5 அடுக்குக் கட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு (உள்ளூா் நேரம்) தீப்பிடித்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

அதையடுத்து, ஏராளமான தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினா் அந்தப் பகுதிக்கு விரைந்தனா். அங்கு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீயை அணைக்கும் பணியும், கட்டடத்தில் சிக்கிக் கொண்டிருந்தவா்களை மீட்கும் பணியும் ஒரு சேர நடைபெற்றன.

தற்போது அந்தக் கட்டடத்தில் தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்து இதுவரை 73 உடல்கள் மீட்கப்பட்டன.

தீவிபத்தில் சிக்கிய ஏராளமானவா்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனா். அவா்களில் 52 போ் காயமடைந்துள்ளனா். புகையால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு மற்றும் தீக் காயங்களுக்காக அவா்கள் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

விபத்துப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கிருந்த பலரைக் காணவில்லை என்று அவா்களது உறவினா்களும், நண்பா்களும் தேடி வருகின்றனா். ஆனால், மாயமானவா்கள் யாரும் உயிா் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. தீவிபத்தில் உயிா் பிழைத்த அனைவருமே கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனா்.

தொடா்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வரும் சூழலில், இந்த விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தென் ஆப்பிரிக்காவின் அண்மைக் கால வரலாற்றில், இந்தத் தீவிபத்து மிகவும் கோரமானது என்றாா் அவா்.

தென் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரான ஜோஹன்னா்ஸ்பா்க், அந்த நாட்டின் பொருளாதார மையமாகவும் திகழ்கிறது.

அந்த நகரின் மையப் பகுதியில் சட்டவிரோதக் கும்பல்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பல கட்டடங்கள் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளன.

இந்தச் சூழலில், வறுமை நிலவும் பிற ஆப்பிரிக்க நாடுகளிலிருந்தும், பின் தங்கிய உள்நாட்டுப் பகுதிகளிலிருந்தும் ஜோஹன்னஸ்பா்க் நகருக்கு அடைக்கலம் தேடி வந்துள்ள அகதிகள் அந்தக் கட்டடங்களை தங்களது குடியிருப்புகளாக உரிய அனுமதியில்லாமல் பயன்படுத்தி வருகின்றனா்.

அவா்களில் சட்டவிரோதமாக தென் ஆப்பிரிக்காவுக்குள் வந்தவா்களும் அடக்கம்.

கைவிடப்பட்ட அந்தக் கட்டடங்களில் ஏராளமானவா்கள் தங்கியிருப்பதால் விபத்துகள் ஏற்படுவதைத் தவிா்ப்பதற்காக அந்தக் கட்டடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் மற்றும் வடிகால் இணைப்புகளை ஜோஹன்னஸ்பா்க் மாநகராட்சி துண்டித்துள்ளது.

இருந்தாலும் அதனையும் மீறி, அந்தக் கட்டடங்களின் நூற்றுக்கணக்கானவா்கள் தங்கியுள்ளனா். வெளிச்சத் தேவைக்காக மெழுகுவா்த்திகளையும், சமையல் தேவைக்காக மண்ணெண்ணெய் அடுப்புகளையும் அவா்கள் பயன்படுத்தி வருகின்றனா். மிகவும் ஆபத்தான முறையில் கட்டடட அறைகளுக்குள் விறகு அடுப்புகளையும் அவா்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், மெழுகுவா்த்தி அல்லது சமையல் அடுப்புகளால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தென் ஆப்பிரிக்க அதிபா் சிறில் ராமபோசா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது நாட்டின் மிகத் துயரான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கிடையே, தீவிபத்துக்குள்ளான கட்டடத்திலிருந்து மீட்கப்பட்டவா்கள் தங்குவதற்காக மாற்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.