போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடரும்: கத்தார்

போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தை தொடரும் என கத்தார் தெரிவித்துள்ளது.
ராபா பகுதியில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனர்கள் | AP
ராபா பகுதியில் இருந்து வெளியேறும் பாலஸ்தீனர்கள் | AP

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர், மீண்டும் தொடங்கியதற்கு தங்களது வருத்தத்தை தெரிவித்ததோடு போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் தொடர்ந்து வருவதாகக் கத்தார் தெரிவித்துள்ளது.

7 வாரங்களாகத் தொடர்ந்து வந்த போரில் நவ. 24 முதல் இருதரப்புக்குமிடையே ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து போர் நிறுத்தம் செய்யப்பட்டது. கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய பிராந்திய நாடுகள் இதற்கு மத்தியஸ்தம் செய்தன.

இந்த நிலையில் போர் நிறுத்தம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில் காஸா மீது தாக்குதலை முழுவீச்சில் இஸ்ரேல் நடத்திவருகிறது.

கத்தார் வெளியுறவு துறை அமைச்சர், போர் நிறுத்தம் முடிந்த சில மணி நேரங்களில் காஸா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மத்தியஸ்த பேச்சுவார்த்தையைப் பாதித்துள்ளதாகவும் மனிதத்துவ பேரழிவை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், போர் நிறுத்தத்தின் விதிகளை மீறியதாக ஒருவர் மீது மற்றொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வருவதாகக் குறிப்பிட்ட கத்தார், சர்வதேச நாடுகளை வன்முறையைத் தடுக்க வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com