யோகப் பயிற்சி என்கிற பெயரில் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு வந்த 71 வயதான கிரிகோரியன் பிவோலரு மற்றும் 14 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது பாரிஸ் நீதிமன்றம்.
கிரிகோரியன் உள்பட 15 பேரில் ஆறு பேரிடம் விசாரணை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீதம் ஒன்பது பேர் விடுவிக்கப்பட்டாலும் நீதிமன்ற கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை, பிரான்ஸின் தலைநகரில் மூன்று வெவ்வேறு இடங்களில் 175 காவல் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆத்மன் என்கிற பெயரில் பல்வேறு இடங்களில் யோகா பயிற்சி மையங்கள் நடத்தும் அமைப்பு, பயிற்சியில் கலந்து கொள்ளும் பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து பாரிஸ் காவல்துறை சோதனையில் ஈடுபட்டது.

சர்வதேச காவல்துறை பிறப்பித்த ரெட் நோட்டீஸ் | AP
ஆசிரமத்தில் பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு பாலியல் செயல்களுக்கு வற்புறுத்தப்படுவதும் அவர்கள் மீதான பாலியல் செயல்கள் விடியோவாக்கப்பட்டு அதன் மூலமாக பணம் ஈட்டுகிற குற்றங்களையும் இந்த அமைப்பு செய்து வந்துள்ளது சோதனையில் கண்டறியப்பட்டது.
மேலும் படிக்க: யோகா குரு பாலியல் குற்றச்சாட்டில் கைது!
முன்னதாக, கிரிகோரியன் மீது 1990-ல் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு பதியப்பட்டிருந்தது. 2017-ல் பின்லாந்து, மனித கடத்தல் வழக்கில் இவரைக் குற்றவாளியாக அறிவித்தது. சர்வதேச காவல் துறை இவரைக் கைது செய்ய ரெட் நோட்டீஸ் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெய்வேலி: அதிமுக வெற்றி

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது

பண்ருட்டி அருகே மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகள்

திமுக தோல்வி: கட்சி நிா்வாகி மாரடைப்பால் மரணம்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


