ஜாம்பியா சுரங்கத்தில் புதைந்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்?

ஜாம்பியாவில் ஏற்பட்ட தாமிரச் சுரங்க விபத்தில் புதைந்த தொழிலாளர்கள் உயிருடன் இருக்கலாம் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
விபத்து நடந்த தாமிரச்சுரங்கத்தில் நடைபெற்று வரும் மீட்புப்பணி
விபத்து நடந்த தாமிரச்சுரங்கத்தில் நடைபெற்று வரும் மீட்புப்பணி

ஜாம்பியாவில் கடந்த வியாழக்கிழமை இரவு, சட்ட விரோதமாக நடைபெற்று வந்த தாமிரச்சுரங்கப் பணியில் விபத்து ஏற்பட்டு 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதைந்து போயினர். அனைவரும் இறந்துவிட்டார்கள் என்ற அனுமானத்தில் 4 நாள்களாக உடல்களை மீட்கும்பணி நடைபெற்று வந்த நிலையில், புதைந்த சுரங்கத்திலிருந்து குரல்கள் கேட்பதால் தொழிலாளர்கள் உயிருடன் இருக்கலாம் என மீட்புப் பணியினர்  நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். 

சிங்கோலா பகுதியில் சட்ட விரோதமாக நடைபெற்று வந்த இந்தச் சுரங்கப் பணியின்போது கனமழை காரணமாக மணல் சரிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதைந்த சுரங்கத்திலிருந்து குரல்கள் கேட்பதால் உள்ளே சுரங்கத் தொழிலாளர்கள் உயிருடன் இருக்கலாம் என நம்புவதாகவும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மீட்புப்பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பெய்துவரும் மழையால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள் எனவும் ஜாம்பியாவின் துணை ஜனாதிபதி முடாலே நலுமாங்கோ தெரிவித்துள்ளார். 

அனைவரும் இறந்துவிட்டதாக நம்பப்பட்டு வந்த நிலையில், சில தொழிலாளர்கள் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் மீட்புப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com