கைது செய்யப்பட்ட பிரபல பாடகர்...காரணம் என்ன?

பிரபல பாடகர் தனது வீட்டுக்கு பதின்பருவ சிறுவர், சிறுமிகளை அழைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அமீர் டடலூ |  Youtube
அமீர் டடலூ | Youtube

ஈரானின் பிரபல பாடகர் துருக்கியில் கைது செய்யப்பட்டு ஈரான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் அரசை விமர்சனம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

டடலூ என்று அறியப்படும் அமீர்ஹூசைன் மக்சூட்லூ, ஈரானிய தலைவர்களை விமர்சனம் செய்துவிட்டு துருக்கிக்கு தப்பியோடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதனால் துருக்கி காவலர்களால் கைது செய்யப்பட்டார் என்பதற்கான சரியான விளக்கம் கிடைக்கப் பெறவில்லையெனினும் இஸ்தான்புல்லில் தான் தங்கியிருக்கும் வீட்டுக்கு அடிக்கடி சிறுவர், சிறுமிகளை அழைப்பதாகச் சொல்லப்படுகிறது.

துருக்கி காவலர்கள் அவரை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஈரானிய கடும்போக்காளர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் மீது பாலியல் உள்பட பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருவது வழக்கமாகி வருகிறது.

டடலூ ஈரானில் ஒருபோதும் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்பட்டதில்லை. அவருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

2019-ல் இவரது இன்ஸ்டாகிராம் கணக்கு, பெண்கள் குறித்து தவறான கருத்துகள் பதிவிடப்படுவதாகவும் குழந்தை திருமணத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்து முடக்கப்பட்டது.

2017-ல் அதிபர் பிரசாரத்தின்போது தற்போதைய அதிபர் இப்ராகிம் ரைஸியை பாடகர் சந்தித்தார். 2015-ல் ஈரான் அரசுக்கு இசை விடியோ ஒன்றை உருவாக்கி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com