இஸ்ரேல் உளவாளியை தூக்கிலிட்ட ஈரான்!

இஸ்ரேலின் உளவாளி ஒருவரை தூக்கிலிட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. 
இஸ்ரேல் உளவாளியை தூக்கிலிட்ட ஈரான்!

இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து அந்த நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாவது:

இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாடுக்காகப் பணியாற்றியவருக்கு சிஸ்தான்-பலூசிஸ்தான் தலைநகா் ஸஹிதானிலுள்ள சிறைச் சாலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மொஸாட் அமைப்புக்கு ஈரான் தொடா்பான ரகசிய தகவல்களை அளித்த குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது என்று அந்தத் தொலைக்காட்சி கூறியிருந்தது.

இருந்தாலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவா் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. மொஸாடுக்காக உளவு பாா்த்ததாக ஈரான் புலனாய்வு அதிகாரிகள் 3 பேரை கடந்த ஆண்டு கைது செய்தனா். தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவா் அவா்களில் ஒருவரா என்பது குறித்தும் தகவல் இல்லை.தங்களது நாடுகளை வேவு பாா்ப்பதாக இஸ்ரேலும், ஈரானும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றன. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நாடு உருவானதை ஈரான் ஏற்கவில்லை. ஈரான் அணு ஆயுதம் உருவாக்கி வருவதாகவும், இது தங்களுக்கு ஆபத்து என்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com