ஈரான் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!

இந்தியா உள்பட 33 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை என்று ஈரான் அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியா உள்பட 33 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை என்று ஈரான் அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கான விசா தேவைகளை ரத்து செய்ய ஈரான் அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் மேலும் 32 நாடுகளுக்கான விசா தேவை ரத்து செய்ய வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஈரான் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரானிற்கு அதிகம் பேர் சுற்றுலா வர வேண்டும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியர்களுக்கு விசாவை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com