தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

பிரபல ஹாலிவுட் நடிகரை வீடு புகுந்து தாக்கிய பெண் கைது! 

பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் மலிபூவில் உள்ள அவரது வீட்டில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணால் வீடு புகுந்து தாக்கப்பட்டுள்ளார். 

News image

நடிகர் சார்லி ஷீன்

Updated On :23 டிசம்பர் 2023, 7:35 am

DIN

பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லி ஷீன் மலிபூவில் உள்ள அவரது வீட்டில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணால் வீடு புகுந்து தாக்கப்பட்டுள்ளார். 

டூ அன்ட் அ ஹால்ஃப் மென் (Two and a Half Men) தொடரின் மூலம் பிரபலமான நடிகர் சார்லி ஷீன், 16 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

47 வயதான பக்கத்து வீட்டுப் பெண் சார்லியின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார். கதவைத் திறந்ததும் அவரது சட்டையைக் கிழித்து அவரது கழுத்தை நெறித்துள்ளார். அவரைத் தாக்குவிட்டு பின் தனது வீட்டிற்கே சென்றுவிட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்தத் தாக்குதலில் சிறிய காயங்களுடன் நடிகர் சார்லி ஷீன் தப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்லி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தபின் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.