லண்டன்: வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடும் பனிப்பொழிவு உடன் கெரீட் புயல் தாக்கி வருகிறது. வீடுகள் சேதமடைந்துள்ளன. ரயில்கள் மற்றும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 80 மைல் வேகத்தில் காற்று வீசுவதாகவும் வீடுகளுக்கு மின்சாரம் கொடுக்க முயற்சித்து வருவதாகவும் உள்ளூர் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
14 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மரமொன்று விழுந்து ரயிலின் ஓட்டுநர் கேபினை தகர்த்துள்ளது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சாலைகளில் பனி மூட்டம் இருப்பதாகவும் சிறியளவிலான சூறாவளி வீடுகளைச் சேதப்படுத்தியுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு 100-க்கும் அதிகமான வீடுகளில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஜப்பானின் குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இங்கிலாந்தின் முதன்மையான ஹீத்ரூ விமான நிலையம், வானிலை சீரற்ற நிலை காரணமாக 18 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


