கரோனா பாதிக்கவில்லை; தடுப்பூசி போடவில்லை என்றால் இதைச் செய்யலாமே?

கரோனா பாதிக்கவில்லை; தடுப்பூசி போடவில்லை என்றால் இதைச் செய்யலாமே?

கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளாதவர்கள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published on


மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்படாது, கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளாதவர்கள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் கரோனா கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்குகிறது.

கடந்த ஆறு மாதங்களில் கரோனாவும் பாதிக்காமல், தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாமல் இருந்தால், கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.

இதையொட்டி, அந்நாட்டைச் சேர்ந்த 18 - 29 வயதுடைய மக்கள் தங்களது 4வது தவணை தடுப்பூசியையும், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5வது தவணையையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.

5 வயது முதல் 17 வயதுடைய சிறார்களில் ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் இருந்தால் அவர்கள் மட்டும் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும், மற்ற குழந்தைகள் யாருக்கும் கூடுதல் தவணை தடுப்பூசி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் 16 வயதுடையவர்களில் 72 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, அவர்களுக்கு இதுவரை மூன்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும். 

இன்னும் ஏன் தடுப்பூசி என்று கேட்பவர்களுக்கு.. உலகம் முழுவதும் கரோனா தொற்று இன்னமும் பரவிக்கொண்டுதானிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் மட்டும் 18,590 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் நாள் சராசரி 2,656 என்பதாகும்.

ஒருவேளை அறிகுறி தென்படும் அனைவருமே பரிசோதனை செய்து கொண்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com