துருக்கியில் 6 வயது சிறுமியை மீட்க உதவிய ரோமியோ - ஜூலி
துருக்கியில் 6 வயது சிறுமியை மீட்க உதவிய ரோமியோ - ஜூலி

துருக்கியில் 6 வயது சிறுமியை மீட்க உதவிய ரோமியோ - ஜூலி

ரோமியோ - ஜூலி மோப்ப நாய்கள், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த 6 வயது சிறுமியை உயிரோடு மீட்க உதவியுள்ளன.

துருக்கியில் 6 வயது சிறுமியை மீட்க உதவிய ரோமியோ - ஜூலி
துருக்கியில் நேரிட்ட நிலச்சரிவில், மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் சென்றிருக்கும் ரோமியோ - ஜூலி மோப்ப நாய்கள், இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த 6 வயது சிறுமியை உயிரோடு மீட்க உதவியுள்ளன.

இடிபாடுகளுக்கு இடையே உயிரோடு சிக்கித் தவித்த சிறுமியை உரிய நேரத்தில் மீட்க உதவிய ரோமியோ - ஜூலி மோப்ப நாய்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளும் குவிந்துள்ளன.

அதாவது, மனிதர்கள் யாரும் உயிரோடு இருக்கிறார்களா என்பதை கண்டறிய உதவும் இயந்திரங்கள் கூட தோற்றுப்போகும் இடங்களில் இந்த மோப்ப நாய்கள் வெற்றியடைகின்றன. இந்த மோப்ப நாய்களின் உதவி இல்லாமல் போயிருந்தால், அந்த சிறுமியை உயிரோடு மீட்டிருக்க முடியாது என்கிறார்கள் நேரில் பார்த்தவர்கள்.

இந்தியாவிலிருந்து சென்றிருக்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், முதல்கட்டமாக இடிபாடுகளுக்கு இடையே உயிரோடு யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்பதை கண்டறியும் பணியில்தான் தீவிரம்காட்டி வருகிறார்கள். 

சிறுமியை ஜூலி எவ்வாறு கண்டுபிடித்தது என்பதை தலைமைக் காவலர் குந்தன் கூறியதாவது, நர்டகி என்ற இடத்தில் மீட்புப் பணிக்காக வந்தோம். அப்போது இடிபாடுகளுக்கு இடையே சென்று யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று பார்க்குமாறு ஜூலியிடம் சொன்னோம். உடனே அதுவும் இடிபாடுகளுக்கு இடையே சென்றது. சிறிது நேரத்தில் அது குறைக்கத் தொடங்கியது. உடனே நாங்கள் அங்கே யாரோ இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு அப்பகுதியில் மீட்புப் பணியைத் தொடங்கினோம்.  அதற்கு முன்பு, ரோமியோவையும் அங்கே அனுப்பினோம். அதுவும் அங்கே சென்று குறைக்கத் தொடங்கியது. இதையடுத்து நிச்சயம் அங்கே ஒருவர் இருக்கிறார் என்பதை உறுதி செய்து கொண்டோம் என்கிறார்.

ஆனால், அங்கே யார் சிக்கியிருப்பார் என்பதை எங்களால் ஊகிக்க முடியவில்லை. பிறகுதான் அங்கே 6 வயது சிறுமி சிக்கியிருந்ததும், அவர் உயிரோடு மீட்கப்பட்டதால் அங்கிருந்த மீட்புப் படையினருக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது என்று குறிப்பிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com