ஹாங் காங்கில் தொடர்ந்து 3-வது ஆண்டாக குறையும் மக்கள் தொகை: கரோனா காரணமா?

கரோனா பேராபத்து உயிரிழப்புகள் அதிகரித்ததால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஹாங் காங்கின் மக்கள்தொகை குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஹாங் காங்கில் தொடர்ந்து 3-வது ஆண்டாக குறையும் மக்கள் தொகை: கரோனா காரணமா?

கரோனா பேராபத்து உயிரிழப்புகள் அதிகரித்ததால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஹாங் காங்கின் மக்கள்தொகை குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் வேலைத் தேடி ஹாங் காங் வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டில் மக்களாட்சி செயலிழந்து விட்டதாக ஹாங் காங்கில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 


2022 ஆம் ஆண்டு இறுதியில் ஹாங் காங்கின் மக்கள் தொகை 0.9 சதவிகிதம் குறைந்து 73 லட்சமாக மாறியது. இதனை அந்த நாட்டின் மக்கள்தொகை புள்ளியியல் கணக்கெடுப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதில், நாட்டில் இருந்து 60 ஆயிரம் பேர் வெளியேறியதாகவும், 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங் காங் சீனாவின் பூஜ்ஜியக் கரோனா திட்டத்தினைப் பின்பற்றியது. இதனால் அதிருப்தியடைந்த ஹாங் காங்கின் இளம் தலைமுறையினர் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பல நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். புதிதாக நாட்டில் அமல்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புக் கொள்கையே அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இது தொடர்பாக அரசு சார்பில் வெளியான அறிவிப்பில் எத்தனை பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்பது குறித்தத் தரவுகளை வெளியிடவில்லை. கடந்த ஆண்டின் இறுதிவரை யாரும் ஹாங் காங்குக்கு திரும்பவில்லை. பின்னர், அரசு கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பின் சிலர் ஹாங் ஹாங் திரும்பத் தொடங்கினர். கடந்த ஆண்டின் முதல் பாதியில் பெரிய அளவிலான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், ஆனால் இரண்டாம் பாதியில் அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 முதல் 2025 ஆம் ஆண்டு இடைவெளியில் ஆண்டுக்கு 35 ஆயிரம் நபர்களை வேலைக்காக ஹாங் காங்கிற்கு வரவழைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹாங் காங்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் லீ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com