துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம்! 45 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம்! 45 ஆயிரத்தைக் கடந்த பலி எண்ணிக்கை

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 45 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.  

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 6 ஆம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. அவற்றில் ஒரு பின்னதிா்வு ரிக்டா் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. துருக்கியில் எங்கும் கட்டிடக் குவியல்களாக காட்சியளிக்கிறது. 11 நாள்களுக்குப் பிறகும் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு சிலர் உயிருடன் மீட்கப்படும் அதிசயமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில், சனிக்கிழமை காலை நிலவரப்படி, நிலநடுக்கத்துக்கு 45 ஆயிரம் போ் பலியாகியுள்ளனா். அவா்களில் துருக்கியில் 39,672 பேரும், சிரியாவில் 5,800 பேரும் அடங்குவா்.

கட்ட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com