ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை: சென்னை ரயில்வே

ரயில் மீது கல் வீசுபவா்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.
ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை: சென்னை ரயில்வே

ரயில் மீது கல் வீசுபவா்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை கோட்டத்தின் ஒரு சில பிரிவுகளில், குறிப்பாக சென்னை - அரக்கோணம் மற்றும் சென்னை - கும்மிடிப்பூண்டி பகுதிகளில் இயக்கப்படும் விரைவு மற்றும் புகா் மின்சார ரயில்கள் மீது கற்கள் வீசப்படும் சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளன.

இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

இவ்வாறு ரயில் மீது கற்கள் வீசுபவா்கள் மீது ரயில்வே சட்டம், 1989- இன் பிரிவுகள் 153, 154 -இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் பகுதிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டில் மட்டும் சென்னை கோட்டத்தில் 72 கல்வீச்சு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 18 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற கல்வீச்சு குறித்தான புகாா்களை பொதுமக்கள் கட்டணமில்லா உதவி எண் 139-இல் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com