
சிரியா மீது நடத்தப்பட்ட இருவேறு பயங்கரவாத தாக்குதல்களில் அந்நாட்டு மக்கள் உள்பட 68 பேர் பலியாகினர்.
டமாஸ்கஸின் மத்திய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட இந்த ஏவுகணைத் தாக்குதலில் ஒரு ராணுவ வீரா் உள்பட 15 போ் கொல்லப்பட்டனா். பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பயங்கரவாதக் குழு, லெபனான் பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியா அரசின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இந்தப் பயங்கரவாத அமைப்புகளின் நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு இஸ்ரேல் வெளிப்படையாக பொறுப்பேற்பதில்லை. அந்த வகையில் இப்போதைய தாக்குதல் குறித்தும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
துருக்கி, சிரியாவில் கடந்த பிப். 6-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பின்னா், முதல்முறையாக இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
இதையும் படிக்க: காஞ்சிபுரம்: கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா
சிரியா நாட்டின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள சுக்னா நகரில் அரசுப் படையினரின் சோதனைச் சாவடியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினா். இதில் 46 பொதுமக்களும், 7 வீரா்களும் பலியாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.