துபையில் மதுபானத்திற்கு 30% வரி குறைப்பு! மது அருந்த கட்டுப்பாடுகள் இல்லை!

துபையில் மதுபானங்களின் மீது 30 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் துபையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் இதனை அறிவித்துள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

துபையில் மதுபானங்களின் மீது 30 சதவிகிதம் வரி குறைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் துபையைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் இதனை அறிவித்துள்ளனர். ஆனால் அரசுத் தரப்பிலிருந்து எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபையில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எண்ணெய் எடுப்பதை மட்டுமே நம்பியுள்ள துபை அரசு, அதற்கு அடுத்ததாக சுற்றுலாவை நம்பி இயங்குகிறது. 

வறட்சியான நிலப்பரப்பைச் சேர்ந்த நாடாக இருந்தாலும், சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில், கட்டமைப்புகளை துபை அரசு வலுப்படுத்தி வருகிறது. 

அந்தவகையில் தற்போது சுற்றுலா பயணிகள் மற்றும் தொழில்நிறுவனங்களைக் கவரும் வகையில், மதுபானங்களின் மீதான வரியை 30 சதவிகிதம் குறைத்துள்ளது. இதனை மதுபான விநியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர். 

அதேபோன்று, துபையிலுள்ள எந்தவொரு சில்லறை விற்பனை மதுபானக் கடையிலும், மது வாங்குவதற்கான சிறப்பு அட்டை அவசியமில்லை எனவும் அறிவித்துள்ளது.

துபை சட்டத்தின்படி, முஸ்லீம் வகுப்பைச் சேராதவர்கள் சில்லறை விற்பனைக் கடைகளில் மது அருந்த 21 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். மதுபானம் வாங்குவதற்கு, வாங்கிக்கொண்டு வாகனங்களில் பயணிப்பதற்கும் துபை காவல் துறையால் வழங்கப்படும் தனிநபர் அட்டையை வைத்திருக்க வேண்டும்.

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள 7 நாடுகளில் ஷார்ஜா, துபை அருகிலுள்ள நாடுகள் மதுபானத்துக்கு முற்றிலும் தடை விதித்துள்ளன. 

இதனால், மதுபானத்துக்கு வரி குறைக்கப்படுவதாக வெளியான அறிவிப்பு துபை சுற்றுலாத் துறைக்கு சாதகமாக அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com