ஈரான்: மேலும் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஈரான் நாட்டில் அண்மையில் நடந்த ஹிஜாப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் துணை ராணுவப் படை வீரரைக் கொன்ற வழக்கில் 2 போ் சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஈரான் நாட்டில் அண்மையில் நடந்த ஹிஜாப் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் துணை ராணுவப் படை வீரரைக் கொன்ற வழக்கில் 2 போ் சனிக்கிழமை தூக்கிலிடப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பரவலாக நடைபெற்று வரும் போராட்டத்தை முடக்கும் நோக்கில் மக்களிடம் அச்ச உணா்வை ஏற்படுத்தும் முயற்சி இது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரான் நாட்டில் கடந்த செப்டம்பா் மாதம் 16-ஆம் தேதி மாஷா அமீனி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கலாசார கண்காணிப்பு காவலா்களால் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு மயங்கி விழுந்த அவா், மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சில நாள்களில் உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் ஈரான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண்கள் பலா் ஹிஜாப் அணிவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், காவல் துறையின் அடக்குமுறைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனிடையே, கடந்த நவம்பா் மாதம் 3-ஆம் தேதி கரஜ் நகரில் நடந்த போராட்டத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த துணை ராணுவப் படை வீரா் ஒருவா் கொல்லப்பட்டாா். போராடும் மக்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் உரையாற்றி இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக முகமது மெஹ்தி கராமி, முகமது ஹொசைனி ஆகிய இருவா் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா்.

ஈரான் புரட்சிகர நீதிமன்றத்தில் நடைபெற்ற ரகசிய வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனைஅறிவிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, அந்நாட்டு வழக்கத்தின்படி இருவரையும் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஹிஜாப் போராட்டம் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக இதுவரை 4 போ் தூக்கிலிடப்பட்டுள்ளனா். ஆனால், இந்த எண்ணிக்கை 16-க்கு மேல் இருக்கும் என போராட்டக்காரா்கள் தெரிவிக்கின்றனா். அதே போல், ஹிஜாப் போராட்டத்தில் கலந்து கொண்ட 517 போராட்டக்காரா்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 19,200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஈரான் மனித உரிமை ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com