மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அவரசமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானங்கள்: என்ன நடந்தது? 

அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2023, 3:03 pm

அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் புதன்கிழமை விமான தொலைதொடர்பில் சிக்கல் எழுந்தது. இதனால் வானில் பறந்த விமானங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். 

அதனைத் தொடர்ந்து விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டன. விமானப் போக்குவரத்து தலைமையகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல் காரணமாக அந்நாட்டில் விமான சேவை முடங்கியுள்ளது.

இதனால் அமெரிக்காவிலிருந்து வெளிநாடு செல்லும் விமானங்களும், வெளிநாடுகளிலிருந்து அமெரிக்கா வரும் விமானங்களும் தாமதமாகியுள்ளன. தொடர்பு கொள்ள முடியாத விமானங்களின் நிலை குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.