கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

டிவிட்டரின் எக்ஸ் லோகோவில் மீண்டும் மாற்றம்!

டிவிட்டரின் நீல நிறக் குருவி இலச்சினையை (லோகோ) அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் மாற்றிய நிலையில், தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்துள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 2:43 am

DIN

டிவிட்டரின் நீல நிறக் குருவி இலச்சினையை (லோகோ) அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் மாற்றிய நிலையில், தற்போது அதிலும் சில மாற்றங்களை செய்துள்ளார். 

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே, அதில் பல அதிரடி மாற்றங்கலை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். அந்த மாற்றங்கள் தனித்துவம் அளித்து வணிக ரீதியாக கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அதனை செய்து வருகிறார். 

அந்தவகையில் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் புகழ் பெற்ற நீல நிற குருவியின் இலச்சினையை மாற்றி கருப்பு - வெள்ளை நிறத்தில் எக்ஸ் இலச்சினையை அறிமுகம் செய்தார். 

இந்த மாற்றம் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. எனினும் எலான் மஸ்க் தொடர்ந்து இலச்சினை இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

தற்போது எக்ஸ் இலச்சினையில் சில மாற்றங்களை செய்துள்ளார். ஏற்கெனவே உள்ள எக்ஸ் இலச்சினையை சற்று அடர்த்தியாக்கி இறுதி வடிவம் கொடுத்துள்ளார். 

ட்விட்டா் பதிவுகள் அனைத்தும் ‘ட்வீட்கள்’ என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்தன. அவை இனி ‘எக்ஸ்’கள் என்று அழைக்கப்படும் என்று மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.