தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சீனா சிச்சுவான் மாகாணத்தில் நிலச்சரிவு: 14 பேர் பலி, 5 பேர் மாயம்

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் ஞாயிற்றுக்கிழமை  திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியானதாகவும், 5 பேர் மாயமாகி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள்

News image
Updated On :4 ஜூன் 2023, 3:34 pm

DIN

பெய்ஜிங்(சீனா): சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் ஞாயிற்றுக்கிழமை  திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலியானதாகவும், 5 பேர் மாயமாகி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள லெஷானில் உள்ள அரசுக்கு சொந்தமான வனத்துறை அலுவலகம் உள்ள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கிக்கொண்டனர். 

உடனடியாக மீட்புப் படையினர் விரைந்து வந்த மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் ஈடுபாடுகளில் சிக்கிய 14 பேர் சடலாகம மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் மயமாகி உள்ளனர். 

தொடர்ந்து 14 சிறப்பு மீட்பு சாதனங்களுடன் 180 க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

குளோபல் டைம்ஸ் என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய செய்தித்தாளான பீப்பிள்ஸ் டெய்லியின் கீழ் வரும் தினசரி செய்தித்தாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.