
செவ்வாய் கிரகத்தில் வட்ட வடிவ பாறை கற்கள் கண்டறியப்பட்டுள்ள புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்வதற்காக ரோவர் விண்கலத்தை கடந்த 2021ஆம் ஆண்டு நாசா விண்ணுக்கு அனுப்பியது. ரோவர் கலன் தொடர்ந்து பயணித்து செவ்வாய் கிரகத்தின் பல்வேறு புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
அந்தவகையில், கடந்த 23ஆம் தேதி ரோவர் கலன் சூப்பர் கேமரா மூலம் புதிய படங்களை அனுப்பியுள்ளது. அதில், செவ்வாய் கிரகத்தில் வட்ட வடிவ பாறைகள் இருப்பதைப் போன்று உள்ளது. பெரிய பாறையைச் சுற்றிலும் சிறிய துண்டுகள் சிதறியவாறு உள்ளது.
செவ்வாய் கிரகத்தில் பாறைகள் இருப்பதைப் போன்று பல முறை ரோவர் கலன் புகைப்படங்களை அனுப்பியுள்ளது. எனினும் டோனட் வடிவில் நடுவில் வெற்றிடமாக உள்ள பாறை கற்களை முதல்முதலில் நாசாவுக்கு கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.