ஆஸ்திரேலியாவில் தமிழர் சுட்டுக்கொலை!

ஆஸ்திரேலியாவில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த முகமது ரகமத்துல்லா சையது அகமது புதன்கிழமை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் முகமது ரகமத்துல்லா சையது அகமது.

சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தபோது 28 வயதான தூய்மைப் பணியாளரை முகமது ரகமத்துல்லா சையது அகமது(32) கத்தியால் குத்தி உள்ளார். இதை அடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து இரண்டு போலீசார் அவரை நெருங்கி வந்தபோது. அப்போது அவர்களையும் அகமது தாக்க முயன்றதாக தெரிகிறது.

இதையடுத்து போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அகமது நெஞ்சில் இரண்டு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்ததில் அகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அகமது 2019 இல் விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியா சென்று அங்குள்ள உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

வீட்டில் அகமதுவின் அம்மா ஆமினா அம்மாள் மற்றும் அக்கா மசூதி மற்றும் மொகமது  ஆகியோர் இருந்து வருகிறார். இவரது அண்ணன் ஹபீல் சென்னையில் உள்ளார்.

இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவின் இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com